வியாழன், 17 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது!


இந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு) அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!

பெற்றோர்கள் பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க பழகிக்கொள்ள வேண்டும்.நமக்கு தெரியாததையா பிள்ளைகள் சொல்லி விட போகிறார்கள்?என்ற எண்ணமும்,பிள்ளைகள் சொல்லி நாம் கேட்பதா என்ற எண்ணமும் இருந்தால் அவர்கள் மேல் கோபம்தான் வரும்.

பெற்றோர்கள் எப்போதுமே பிரச்சனைகளை பிள்ளைகள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதில்லை! தங்கள் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள்.அதனால்தான் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிவதில்லை!மாறாக குழந்தைகளின் கண்ணோட்டத்திலிருந்து பிரச்சனையை அணுகி தெளிவான தீர்வினை அவர்களுக்கு அளித்தால் கண்டிப்பாக குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகள் அன்பான வார்த்தைகளுக்காக ஏங்குகிறார்கள். தன் அப்பா,அம்மா தன்னிடம் கொஞ்சி பேச வேண்டும்.தனுக்கு பிடித்தமானவற்றை வாங்கித்தர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.உதாரணமாக ஆண்குழந்தைகளானால் தொப்பி,கண்ணாடி,கடிகாரம்,மோதிரம்,செயின்,பெல்ட்,ஷூ, விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றையும் பெண் குழந்தைகளானால் பூ,பொட்டு, வளையல், துணி,மணி, ,போன்ற தான் விரும்பும் எதையும் ஆசையுடன் வாங்கித்தர வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்!பெற்றோர்களால் வாங்கித்தரப்படாத ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குள் தீராத ஏக்கமாக மாறி ஆழ்மனதுக்குள் புதைக்கப்படுகிறது.

குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் தமக்கு அன்பாகவும்,ஆறுதலாகவும் இருந்து வழி காட்டுவார்கள் என்று நம்புகிறாகள்.நம்பிக்கை உடையும்போது சில குழந்தைகள் பிரச்சனைகளை தானே சமாளிக்க கற்றுக்கொள்கிறார்கள்.சில குழந்தைகள் வேறு நபர்களின் உதவியை நாடத்தொடங்குகிறார்கள்.பிரச்சனை அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.எனவே அவர்களுக்கு எப்போது பிரச்சனையோ அப்போதெல்லாம் பெற்றோரை ஒரு நண்பனாக எண்ணி பிரச்சனைக்கு தீர்வை நாடும்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் நல்ல ஆடை உடுத்த வேண்டும்.நன்றாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அவர்களிடம் இந்த உடையை உடுத்தாதே,இப்படி தலைவாராதே, அப்படி பவுடர் அடிக்காதே என்று படுத்தி எடுத்தால் பெற்றோர்களின் மேல் அவர்களுக்கு எரிச்சல்தான் வரும்.

குழந்தைகள் பெற்றோர் கொடுப்பது சிறிய பொருளாக இருந்தாலும்,பெரிய பொருளாக இருந்தாலும் தன் அப்பா அம்மா தனக்காக எடுத்து வைத்திருந்து கொடுக்கிறார்கள் என்று மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.மாறாக சிறியது,பெரியது,விலை உயர்ந்தது,விலை மட்டமானது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.எனவே அவ்வப்போது பரிசுகளையும்,பாராட்டுக்களையும் கொடுக்க மறக்காதீர்கள்.

குழந்தைகள் வெவ்வேறு வீடுகளுக்கு செல்லும் சமயங்களிலும், வெவ்வேறு விஷேசங்களுக்கு செல்லும் சமயங்களிலும் தன் அம்மாவின் சமையலை அந்த சமையலோடு ஒப்பிட்டு பார்க்கின்றன.ஆனாலும் இந்த சமையல் என் வீட்டில் என் அம்மா செய்து எனக்காக கொடுத்து நான் சாப்பிடுவது போல் ஆகுமா?என்றே நினைக்கின்றனர்.குழந்தைகளுக்கு தன் அம்மாவின் சமையலை மிஞ்ச யாருமில்லை என்ற நினைப்பே மேலோங்கி இருக்கும்.எனவே என் பிள்ளைக்கு இது பிடிக்கும் என்று ஏதாவது ஒரு சின்ன பொருளாவது செய்து கொடுங்கள்.

ஒரு கவிதை:

நாங்கள் ஜாலியாக இருப்பது
உங்களுக்கு சந்தோஷமில்லையா?
அப்படியாயின் உங்கள் பெயர்
பெற்றோர்கள்தானா?

மழலை உலகம் மகத்தானது என்பதில் மாற்று கருதுக்கு இடமில்லை!சகோதரர்கள் இன்னும் சிறப்பாக மழலை உலகத்தை மகிழ்ச்சி உலகமாக மாற்றட்டும்!

Follow This Blog !!!

3 கருத்துகள்:

 1. //பெற்றோர்கள் எப்போதுமே பிரச்சனைகளை பிள்ளைகள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதில்லை! தங்கள் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள்//

  உண்மை.

  //குழந்தைகள் அன்பான வார்த்தைகளுக்காக ஏங்குகிறார்கள்//

  உண்மை. உண்மை.

  //குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் தமக்கு அன்பாகவும்,ஆறுதலாகவும் இருந்து வழி காட்டுவார்கள் என்று நம்புகிறாகள்.//

  உண்மை. உண்மை. உண்மை.

  இவ்ளோ திறமைய வச்சிக்கிட்டு சும்மா இருக்கீங்க!. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. தஙகள் அழைப்பிற்கு நன்றி தோழி..

  நான் முன்பே சென்னைப்பித்தன் ஐயா அழைப்பிற்காக

  மழலை உலகம் என்னும் தலைப்பில்

  எழுதிவிட்டேன்.

  இணைப்பு இதோ..

  http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_3736.html

  தங்கள் அன்பிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.


  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  பதிலளிநீக்கு